மாட்சிமைக்குரிய என் எஜமான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன்! புகழுக்குரிய அவனிடம் சிரம் தாழ்த்தி உதவி தேடுகிறேன்! அவன் கருணையைப்போற்றி என்னை மன்னிக்கக் கோருகிறேன்! என் மனத்தீமைகளிலிருந்து அவனிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை, அவன் எவரை வழிகேட்டில் விட்டுவிடுவானோ அவரை நேர்வழி காட்டுபவர் எவருமில்லை.
மேலும் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை என்றும் நான் சான்று பகர்கிறேன். நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார்கள் எனவும் நான் சான்று பகர்கிறேன்.
அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், சுஹதாக்கள், முத்தக்கீன்கள், அவர்களை உயிரிலும் மேலாக மதித்து இறுதிநாள்வரை இந்த தீனின் கொடியை தமது ஈமானிலும், பொறுமையிலும், தியாகத்திலும் நின்று உயர்த்திப்பிடிக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும், கருணையும், நிலையான சுவர்க்கமும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். ஆமீன்!
பயணம் தொடரும்...
சஊதி நிதியும் சதியும்
ReplyDeleteமுஸ்லிம்களைப் பிளவுபடுத்தும் மூல மந்திரம்!
சஊதி நிதி இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சிந்தனைக் குழப்பங்களை தோற்றுவித்து வருகிறது. ஒரே மஸ்ஜித் நிர்வாகத்ததில் ஆயிரம் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம், இந்த முஸ்லிம் சமூகம். இப்போது இந்த சமூகத்தில் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. மஸ்ஜிதுக்கு மஸ்ஜித் குரோதம் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் கருத்து முரண்பாடுகளுடன் ஒரு பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணங்கி வந்த இந்த சமூகம், ஒரே உறவுகளாய் ஒரே ஜமாஅத்தாராய் வாழ்ந்த இந்த சமூகம், ஊர்களில, நகரங்களில், கிராமங்களில் பிரிந்து நின்று சண்டையிடுகின்றன. குடும்பங்கள் பிளவுபட்டு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் இல்லங்கள் முஸ்லிமின் இரத்தத்தில் உறைந்து அவமானப்படுகிறது. எம்மை பிரிக்க சதி செய்தோர் பின்னால் இருந்து பார்த்து ரசிக்கின்றனர்.
ஒற்றுமையின்மையும், சண்டையும், சச்சரவுகளும் நோய்களாய் இந்த உம்மத்தை எப்படி பற்றின?
ஜாஹிலிய்யத்தின் பக்கம் வெகு வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் உலகை நாசத்திலிருந்து காத்து இஸ்லாத்தின் நிழலில் நிறுத்த வேண்டிய சமூகம். அல்குர்ஆனின் கட்டளைகளுக்குள் முழு உலகையும் கொண்டு வரவேண்டிய சமூகம்.
எரியும் பிர்சினைகள் எவ்வளவோ இருக்க இந்த சமூகத்தை வீணான சர்ச்சைகளிலும், விதண்டா வாதங்களிலும் மூழ்கிக் கிடப்பதற்கு பிக்ஹு பிரச்சினைகளை தஃவா என்று அர்த்தப்படுத்திக் கொடுத்த அந்த சக்தி எது?
வெளிநாட்டுப் பணத்தால் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பிரிவினரை மூளைச் சலவை செய்தது யார்? இந்தப் பிரிவினர் நாளுக்கு நாள் அவர்களுக்குள்ளேயே பிளவு பட்டு, கருத்து முரண்பட்டு குழுக்களாய் பிரிந்து புதிய புதிய பெயர்களில் இயக்கங்கள் அமைத்து செயற்படுவதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
இவை எல்லாவற்றிற்கும் இருப்பது ஒரே ஒரு பதில்!
அது தான் சஊதி தஃவா பணம்!
பணத்தை வீசி முஸலிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சஊதிக்கு ஏன் இப்படி ஒரு தேவை?
உட்பூசல்களைகயும், பிரிவினையையும் அது எதற்காக ஏனைய முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்?
சஊதியின் மன்னர் அரசியலுக்கும், அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கும் உள்ள உறவின் பிறப்பே இந்த முஸ்லிம் உம்மத்தை கூறு போடும் சஊதியின் சதி!
அதை வேறுவிதமாக இப்படியும் சொல்லலாம்.
www.badrkalam.blogspot.com